கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


கரூர்
x
கரூர்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர், 
பங்குனி உத்திர திருவிழா
கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.           இந்நிலையில் கடந்த 16-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.
திரளான பக்தர்கள்
பின்னர் காலை சுமார் 7.20 மணியளவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பின்னர் மாலை 6 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவமும், நாளைமறுநாள் (திங்கட்கிழமை) ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story