திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவில் தேரோட்டம்


திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 12:48 AM IST (Updated: 19 March 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாயகி உடனாகிய பரிமள ரெங்கநாதர்கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. 108 திவ்ய தேசங்களுள் 22-வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமுமான இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. 
இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமளரெங்கநாதர் தேரில் எழுந்தருளினர். 
இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தீர்த்தவாரி நிகழ்ச்சி
அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு தேர் வந்தபோது வழிபாடு நடத்தினர். தேர் 4 விதிகளையும் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. 
பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story