சென்ன கேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
காரியாபட்டி அருேக சென்ன கேசவ பெருமாள் கோவில் தேேராட்டம் நடந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு செங்கமல தாயார், சென்னகேசவ பெருமாள் கோவில் பங்குனித் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னகேசவபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதி வழியாக சென்ற தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இரவு தேர் நிலையை அடைந்தது. இந்த விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story