வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ராஜபாளையம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி ெதாடங்கியது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் வனச்சரகமானது அய்யனார் கோவில், முடங்கியாறு மற்றும் சாஸ்தா கோவில் ஆகிய 3 பிரிவுகளாக உள்ளது. இதில் ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டை மலை, நீராவி, நவலூத்து, பிறாவடியார், தேவியாறு, புல்லுப்பத்தி உள்ளிட்ட 11 பீட்டுகள் உள்ளது.
இப்பகுதியில் உள்ள யானை, வரையாடு, கரடி, மான் இனங்கள், குரங்கு இனங்கள், காட்டெருமை இனங்கள், சிறுத்தை இனங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியில் பீட்டுக்கு ஒரு குழு என 11 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு குழுவிலும் வனத்துறையை சேர்ந்த 3 பேர், தன்னார்வலர்கள் 2 பேர் என 5 பேர் வீதம், 11 குழுக்களில் மொத்தம் 55 பேர் கணக்கெடுத்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் செல்லும் இந்த குழுவினர், வனப்பகுதிக்குள் தங்கி இருந்து நேரடியாகவும், வன விலங்குளின் எச்சம், கால்தடங்கள், நீர் நிலைப்பகுதிக்கு நீர் அருந்த வரும் விலங்குகள் என பல்வேறு வழிமுறைகளில் வன விலங்குகளை கணக்கெடுப்பார்கள். வனப்பகுதிக்குள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமாரிடம் ஒப்படைக்க உள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story