பெண்ணை அவதூறாக பேசிய ஆசிரியர் கைது


பெண்ணை அவதூறாக பேசிய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 1:04 AM IST (Updated: 19 March 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் பெண்ணை அவதூறாக பேசிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 43). இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திசையன்விளை முத்து பேச்சியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 
அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று கூறி, ஆசிரியர் முத்தையா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்ல மறுத்தார். இதுகுறித்து அவரது தாயார், ஆசிரியர் முத்தையா வீட்டிற்கு சென்று கேட்டார். அப்போது அவரை ஆசிரியர் முத்தையா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்மேனன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முத்தையாவை கைது செய்தார்.

Related Tags :
Next Story