அருப்புக்கோட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்'
அருப்புக்கோட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்'வைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமாக பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் பலர் முறையாக வாடகை செலுத்தவில்லை என புகார் எழுந்தது.லட்சக்கணக்கில் வாடகை பாக்கி இருந்ததால் நகராட்சி தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பழைய பஸ் நிலையம், டெலிபோன் ரோடு, பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத டீக்கடை, பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை கடை, திருமண தகவல் மையம் உள்ளிட்ட 5 கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீசு ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த 5 கடை உரிமையாளர்களும் நகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை பாக்கி வைத்துள்ள மற்ற கடை உரிமையாளர்கள் உடனடியாக வாடகையை செலுத்தவேண்டும் எனவும் வாடகை செலுத்த தவறினால் உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story