விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றும் வழக்கம்போல் வெயில் அடித்தது. இந்த நிலையில் திடீரென மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பணகுடி பகுதிகளில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது பயங்கர இடி-மின்னல் ஏற்பட்டது. இதில் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவரது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story