திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 19 March 2022 1:26 AM IST (Updated: 19 March 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

முக்கூடல்:
முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன், பத்திரகாளி அம்மன், சந்தன மாரியம்மன், பேச்சியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். மறுநாள் தீர்த்தம் எடுத்து உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரப்பட்டது. இரவு அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பம் ஏற்றுதல், கரகாட்டம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஹரிராம்சேட் தலைமையில் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

Next Story