12 முதல் 14 வயதுடைய 8,288 பேருக்கு `கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி

திருச்சி, மார்ச்.19-
திருச்சி மாவட்டத்தில் தற்போது 12-14 வயதில் உள்ள சிறார்களுக்கும் பிரத்தியேகமாக `கோர்பேவேக்ஸ்' எனும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக பள்ளிகள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12-14 வயதிற்குட்பட்ட 80 ஆயிரம் சிறார்களில் நேற்று ஒரே நாளில் மட்டும்8,288சிறார்களுக்கு`கோர்பேவேக்ஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 21,20,843 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதில் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.அதனால் சிறார்களும் சிறார்களின் பெற்றோர்களும் அச்சமின்றி தடுப்பூசிசெலுத்திக்கொண்டுபயன்பெறுமாறுகலெக்டர் சிவராசுகேட்டுக்கொண்டுள்ளார்.

Related Tags :
Next Story