மேச்சேரி வாலிபரிடம் ரூ.31,800 மோசடி
செல்போன்கள் விற்பனை செய்வதாக கூறி மேச்சேரியை சேர்ந்த வாலிபரிடம் ரூ.31,800 மோசடி செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாரின் முயற்சியால் பணம் மீட்கப்பட்டுள்ளது.
சேலம்:-
செல்போன்கள் விற்பனை செய்வதாக கூறி மேச்சேரியை சேர்ந்த வாலிபரிடம் ரூ.31,800 மோசடி செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாரின் முயற்சியால் பணம் மீட்கப்பட்டுள்ளது.
மோசடி புகார்
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராஜா (வயது 26). இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், குறைந்த விலைக்கு செல்போன் டெலிவரி செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பி ராஜா 4 செல்போன்கள் வாங்குவதற்கு ரூ.31 ஆயிரத்து 800-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு செல்போன் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் துரிதமாக செயல்பட்டு பணத்தை இழந்த ராஜாவின் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.31,500-ஐ சேர்க்கப்பட்டது. மேலும், மோசடி நபரின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை முடக்கம் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
இதுபோன்ற அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் போலியான ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையோ? செல்போன் எண்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களின் வங்கி விவரம் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொள்ளலாம் என்றும், அவ்வாறு புகார் தெரிவித்தால் இழந்தை பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் எச்சரிக்கை செய்துள்ளார்.
Related Tags :
Next Story