பள்ளிக்கூட மாணவர்களை பெயிண்டு அடிக்க வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
பள்ளிக்கூட மாணவர்களை பெயிண்டு அடிக்க வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊஞ்சலூர் அருகில் வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட பெரியூர் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் பட்டியலின மாணவர்களை பெயிண்டு அடிக்க வைத்ததாக தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் நடுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சி.நவீன்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் டி.தங்கவேல், அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.பி.கனகவேல், கே.சண்முகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்து கோஷமிட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story