ஒன்றிய அலுவலக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
ஒன்றிய அலுவலக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பழைய தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 46). இவர் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்திவேலுக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story