3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சட்டவிரோதமாக மது தயாரித்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர்;
சட்டவிரோதமாக மது தயாரித்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மது தயாரிப்பு
தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டி பகுதியில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் போலி மதுபானங்கள் சட்டவிரோதமாக தயார் செய்வதும், இதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து மதுபானங்களை தயாரித்து போலி ஸ்டிக்கர்களை ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதன்பேரில் அங்கிருந்த 6 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 6 பேரில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேருநகர் 4-வது குறுக்குத்தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது42), தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் ஊராட்சி காமாட்சியம்மன்கோவில்நகரை சேர்ந்த அருண்பாண்டியன் (32), காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து திரவுபதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனியப்பன் (38) ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து விஜயகுமார், அருண்பாண்டியன், பழனியப்பன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story