தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2022 2:52 AM IST (Updated: 19 March 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை

திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ஆற்றங்கரை வழிநடப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நதியா. இவர்களது மகன் பிரித்தீஷ் (வயது13)  திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான். சம்பவத்தன்று நதியா தனது சகோதரனை பார்ப்பதற்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது பிரித்தீசையும் தனது தாயுடன் சென்று மாமாவை பார்த்து விட்டு வரும்படி பாபு கூறியுள்ளார். ஆனால் பிரித்தீஷ் தாயுடன் செல்லாமல் கோவில் தேரோட்டம் பார்ப்பதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த பாபு தொலைபேசி மூலம் பிரித்தீசை  திட்டினார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரித்தீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story