இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா 23-ந் தேதி தொடங்குகிறது
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
குலசேகரம்,:
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
பழமையான கோவில்
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலியில் பழமையான நீலகேசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூஜை நடத்துவது தனிச்சிறப்பாக உள்ளது.
இந்த கோவிலில் அம்மயிறக்க திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலையில் பொன்மனை கிழக்கம்பாகம் சந்திப்பில் கிழக்கு மாவட்டங்களில் இருந்து வரும் பழங்குடி பூசாரிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு அம்மயிறக்கம் நடக்கிறது.
தூக்க நேர்ச்சை
தொடர்ந்து 10 நாட்கள் கோவிலில் அம்மயிறக்க திருவிழா நடைபெறும். விழாவில் 27 -ந் தேதி மாலையில் 2007 திருவிளக்குப் பூஜையும், 29-ந் தேதி புகழ் பெற்ற தூக்க நேர்ச்சையும் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான வருகிற 1-ந் தேதி மாலையில் பொங்கல் வழிபாடு நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை நீலகேசி அம்மா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
---
Related Tags :
Next Story