மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு கலெக்டர் உதவி
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு கலெக்டர் உதவி
மதுரை
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் சிவக்குமார். மாற்றுத்திறனாளி. இவர் வங்காளதேசத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். ஆனால் அங்கு செல்ல அவருக்கு போதுமான நிதி வசதி இல்லை. எனவே அதற்கு தேவையான நிதி உதவி வழங்கும்படி சிவக்குமார், கலெக்டர் அனிஷ் சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். அந்த மனுவை பரிசீலித்த கலெக்டர், தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்தார். அந்த நிதியினை சிவக்குமார், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் அனிஷ் சேகரிடம் இருந்து பெற்று கொண்டார். அப்போது கலெக்டர், சிறப்பாக விளையாடி மதுரைக்கு பெருமை தேடி தர வேண்டும் என்று வாழ்த்தினார்.
Related Tags :
Next Story