பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமானவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு
பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமானவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான ராமநாதன், அவர் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் நம்பி செல்வம் ஆஜரானார்.
முடிவில் "இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது. அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story