மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாவிட்டால் ஐ.ஜி. அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம்


மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாவிட்டால் ஐ.ஜி. அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம்
x
தினத்தந்தி 19 March 2022 3:02 AM IST (Updated: 19 March 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாவிட்டால் ஐ.ஜி. அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்;
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையன்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, புகார்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதும்பட்சத்தில், அவர்கள் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை 0431-2333909 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் கருதும் பட்சத்தில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தின் 0431-2333866 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story