முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்து மோசடி செய்தவர் கைது
முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து மோசடி செய்தவரை ஒரு வருடத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன் என்ற ரவிக்குமார் (வயது 38). இவர், கடந்த ஆண்டு திருமண தகவல் மையத்தின் மூலம் இளம்பெண் ஒருவரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் வேலைக்கு சென்ற அவர் அதன்பிறகு சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண், தனது கணவர் லோகநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது லோகநாதன், “எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருப்பதாக” கூறினார். இதைகேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் லோகநாதன், “இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் உனது தங்கையை கற்பழித்து விட்டு, உன்னையும் கொலை செய்து விடுவேன்” என்றும் மிரட்டினார்.
கைது
இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தனது மகளை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட லோகநாதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை ேதடி வந்தனர்.
இந்தநிலையில் வடபழனி உதவி கமிஷனர் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அசோக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் தலைமறைவாக இருந்த லோகநாதனை ஒரு வருடத்துக்கு பிறகு குன்றத்தூரில் பதுக்கி இருந்தபோது மடக்கி பிடித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story