வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்


வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 March 2022 6:24 PM IST (Updated: 19 March 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் வழிகாட்டுதலின்படி, ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25-வது மெகா கொரோனோ தடுப்பூசி முகாம் நடந்தது. கிராம சுகாதார செவிலியர்கள், நடமாடும் மருத்துவ குழுவினர் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை வட்டார மருத்துவ அலுவலர்  ச.பசுபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story