வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகுசவாரி. கலெக்டர் தகவல்
வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகுசவாரி விடப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகுசவாரி விடப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை அழகிய அகழியுடன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோட்டையில் பல்வேறு புராதான கட்டிடங்கள், வரலாற்று நினைவுகளை பறைசாற்றும் கட்டிடங்கள் உள்ளது. இந்த கோட்டையில் சில இடங்களில் சரியான பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவில் இருந்தது.
இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, மாநகராட்சி ஆகியவை இணைந்து கோட்டையை தூய்மையாக்க ஒட்டுமொத்த தூய்மைப்பணி தொடங்கியது.
இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கிவைத்தார். இதில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, ஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில் காவல்துறை, மாநகராட்சி தூய்மை பணியாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரே நாளில் 750 பேர் கோட்டையை தூய்மை படுத்தினர். அவர்களுடன் கலெக்டர், டி.ஐ.ஜி. ஆகியோரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் படகு சவாரி
வேலூர் மாநகர பகுதிகளிலும், வேலூர் மாவட்ட பகுதிகளிலும் வாரம் ஒருமுறை பணியாளர்கள் அனைவரையும் வைத்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். அன்றாடம் நடைபெறும் பணிகளை காட்டிலும் இந்தபணி சிறப்புமிக்க பணியாகும்.
முதல்கட்டமாக வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் இருந்து இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நம்முடைய ஊரையும், நம்முடைய ஊரை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள், கோட்டையின் உட்புற பகுதிகளை தூய்மைப்படுத்த மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அந்த குழு தங்களது பணிகளை செய்ய இயலவில்லை.
அடுத்த ஓராண்டு காலத்துக்குள் வேலூர் கோட்டை ஒரு சிறந்த சுற்றுலாதலமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக மாற்றப்படும். கோட்டை அகழியில் மீண்டும் படகுசவாரி விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story