இலங்கை பெண் பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை


இலங்கை பெண் பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2022 6:32 PM IST (Updated: 19 March 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை பெண் பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி, 
தொண்டி அருகே உள்ள எஸ்.பி. பட்டினத்தில் பெண் ஒருவர் கடந்த சில தினங்களாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இருந்த சேவல், பானை போன்ற பொருட்களை திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை மேலத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பால் பாக்கெட்டுகளை திருடியுள்ளார். அப்போது அவரை பிடித்து எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இவரிடம் விசாரித்ததில் இவர் இலங்கையை சேர்ந்த கவிதா என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இவரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இவர் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதும் இலங்கையை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த பெண் இலங்கையை சேர்ந்தவர் என்று கூறப்பட்டதால் எஸ்.பி. பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story