பள்ளி வளாகத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு


பள்ளி வளாகத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 March 2022 6:51 PM IST (Updated: 19 March 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வளாகத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு

உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டிஊராட்சி பள்ளி வளாகத்தில் மேல்நிலைக்குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
எரிசனம்பட்டி
உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உடுமலை தாலூகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் கணேசனிடம் ஒரு கோரிக்கை மனுவைக்கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது.
உடுமலை ஊராட்சி ஒன்றியம் எரிசனம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஏற்கனவே 3பள்ளி வகுப்பறை கட்டிடங்கள்மற்றும் ஒருஅங்கன்வாடி கட்டிடம் உள்ளது. அதுபோக சத்துணவு சமையலறை கட்டிடமும் உள்ளது. குழந்தைகளுக்கான கழிவறையும் உள்ளது.
இதுபோக மீதி சுமார்10சென்ட்தான் காலி இடம் இருக்கும். அந்த இடம் காலையில் பள்ளி குழந்தைகளின் இறைவணக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பள்ளி குழந்தைகள் விளையாடுவதற்கு கூட இடவசதியில்லை.
மேல்நிலைக் குடிநீர் தொட்டி
இந்த நிலையில் இந்த பள்ளி வளாகத்திற்குள் மேல்நிலைக்குடிநீர் தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 
இதுதவிர இந்த பள்ளி வளாகத்தில் வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு நிழல் தரும் மரங்களையும் வெட்ட ஊராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், வரும்காலத்தில் குழந்தைகளின் வருகை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவதற்கு இடம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டும் மேல்நிலைக்குடிநீர்தொட்டியை, பள்ளி வளாகத்தில் கட்டாமல் வேறு இடத்தில் கட்டும்படி கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story