அரசு கொப்பரை கொள்முதலின் போது கியூஆர் கோடு மூலம் விவசாயிகளின் விவரங்களைப் பதிவு செய்யும் நவீன உத்தி


அரசு கொப்பரை கொள்முதலின் போது கியூஆர் கோடு மூலம் விவசாயிகளின் விவரங்களைப் பதிவு செய்யும் நவீன உத்தி
x
தினத்தந்தி 19 March 2022 7:00 PM IST (Updated: 19 March 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

அரசு கொப்பரை கொள்முதலின் போது கியூஆர் கோடு மூலம் விவசாயிகளின் விவரங்களைப் பதிவு செய்யும் நவீன உத்தி

போடிப்பட்டி, 
நடப்பு ஆண்டில் அரசு கொப்பரை கொள்முதலின் போது கியூஆர் கோடு மூலம் விவசாயிகளின் விவரங்களைப் பதிவு செய்யும் நவீன உத்தி பின்பற்றப்படுகிறது.
விலை சரிவு
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தென்னை விவசாயிகள் தேங்காய், இளநீர் விற்பனை மூலம் மட்டுமல்லாமல் கொப்பரை உற்பத்தி மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக கொப்பரையின் விலை மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. 
தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ 100 க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. இதனையடுத்து தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED) மூலம் கொப்பரைகளை அரசே கொள்முதல் செய்து வருகிறது.
விவசாயிகள் ஆர்வம்
உடுமலை தாலுகாவில் உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இதற்கான கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு அரவை கொப்பரை ஒரு கிலோ 105.90 க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ 100 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி சந்தையை விட அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை 50 கிலோ கொண்ட சாக்குப்பைகளில் அடைத்து மொத்தமாக இருப்பு வைத்து அனுப்பும் வழக்கமான நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு 50 கிலோ மூட்டையிலும் கியூஆர் கோடுடன் கூடிய அடையாளச்சீட்டு இணைக்கப்படுகிறது. 
 இதனை ஸ்கேன் செய்யும்போது அந்த கொப்பரையை விற்பனை செய்த விவசாயி குறித்த விவரங்கள் விற்பனை செய்யப்பட்ட மூட்டைகள் எண்ணிக்கை மற்றும் கொப்பரையின் தரம், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் வியாபாரிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

Next Story