வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
தங்கம் வாங்க ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து டோக்கன் பெற்று ஒவ்வொருவராக காத்திருந்து தங்கம் பெற்றுச் சென்றனர்.
இந்த திட்டத்தில் பதிவு செய்து தங்கம் வாங்காத பயனாளிகள் சமூகநலத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story