ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது


ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 8:00 PM IST (Updated: 19 March 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்ணாங்குண்டு பள்ளிவாசல் அருகில் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து 15  மூடைகளில் மணல் அள்ளிச்சென்ற பெரியபட்டிணம் ஜலாலியா நகரை சேர்ந்த அப்துல்ரகீம் மகன் இர்பான்அலி (வயது21) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story