தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி:
மன்னார்குடியில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரே மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச்செயலாளர் கலைச்செல்வன், எல்.பி.எப் மாவட்ட செயலாளர் மகாதேவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச்செயலாளர் ரகுபதி, ஐ.என்.டி.யூ..சி மாநில துணைப்பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிற்சங்க நகர செயலாளர் சரவணன், டி.என்.சி.எஸ்.சி. தொழிற்சங்க நிர்வாகி நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரோத மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story