லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்


லாரி மீது  மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 19 March 2022 9:21 PM IST (Updated: 19 March 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்

அவினாசி:
அவினாசி அருகே லாரி மீது  மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் 
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 29) மற்றும் விஷ்வா (21). இவர்கள் 2 பேரும்   கோவையில் தங்கி ஆய்வக டெக்னீசியனாக வேலை பார்த்துவந்தனர்.  இந்த நிலையில் இவர்கள்  2 பேரும் சேலத்திலிருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 
இவர்களுடைய மோட்டார்சைக்கிள் அவினாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் வந்தது. அப்போது அங்கு டயர் பஞ்சரான லாரி ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரியின் பின் பக்கத்தில்  பிரகாஷ் மற்றும் விஷ்வா வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில்  2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
வாலிபர் பலி
உடனே அக்கம்பக்கத்தினர் காயம்பட்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பிரகாசை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த விஸ்வாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா.

Next Story