மணப்பாடு கடலில் விடப்பட்ட அரியவகை ஆமை குஞ்சுகள்


மணப்பாடு கடலில் விடப்பட்ட அரியவகை ஆமை குஞ்சுகள்
x
தினத்தந்தி 19 March 2022 9:24 PM IST (Updated: 19 March 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு கடலில் அரியவகை ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.

உடன்குடி:
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில், அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ‘ஆலிவ் ரிட்லி’ எனும் அரியவகை ஆமைகள் அதிகளவில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.

கடற்கரை மணலில் முட்டையிடும் ஆமைகளின் முட்டைகள் பல்வேறு காரணங்களால் சேதமடைகின்றன. எனவே அவற்றை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தினர் சேகரித்து இயற்கை சூழலில் குஞ்சு பொறிக்க வைக்கின்றனர். பின்னர் ஆமை குஞ்சுகளை கடலில் விடுகின்றனர்.
கடலில் விடப்பட்டன

அதன்படி குலசேகரன்பட்டினம் பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தினர் ‘ஆலிவ் ரிட்லி’ இன ஆமை முட்டைகளை சேகரித்து இயற்கை சூழலில் குஞ்சு பொறிக்க வைத்தனர். முட்டைகளில் இருந்து வெளிவந்த 98 ஆமை குஞ்சுகளை மணப்பாடு கடலில் விட்டனர். மணப்பாடு, பெரியதாழை கடலோர பகுதிகளில் ‘ஆலிவ் ரிட்லி’ இன ஆமைகள் வாழ உகந்த தட்பவெப்ப சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story