இந்திலி பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம்
இந்திலி பாலதண்டாயுதபாணி கோவிலில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலையில் அலங்காித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
செல்வ முருகன் கோவில்
கள்ளக்குறிச்சி சித்தேரி பகுதியில் உள்ள செல்வ முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோட்டைமேடு ஆற்றங்கரை பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கச்சேரிசாலை, சேலம் மெயின்ரோடு, கடைவீதி, மந்தைவெளி வழியாக செல்வமுருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story