18 பவுன் நகை திருட்டு


18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 March 2022 9:43 PM IST (Updated: 19 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி, 
காரைக்குடி பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நில அளவைத் துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி பெரிய கோட்டையில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். மாலை ஆசிரியை வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் வீடெங்கும் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில்தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story