கடலூரில் சுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கடலூரில் சுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கடலூர்
கடலூர் வில்வராயநத்தத்தில் சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவிலில் தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் பெண்ணை நதிக்கு சென்று 108 காவடிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 11 மணி அளவில் கோவிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 4.30 மணியளவில் நிலைக்கு நின்றதும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி வீதிஉலா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story