2 புள்ளி மான்கள் காயம்
தியாதுருகத்தில் 2 புள்ளி மான்கள் காயமடைந்தன.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அடுத்த திம்மலை காப்புக்காடு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று வெளியே வந்தது. பின்னர் தியாகதுருகம் கரீம்ஷாதக்கா பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து மானை மீட்டு தியாகதுருகம் கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் அந்த மான் மலைக்கோட்டாலம் காப்பு காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
இதேபோல் தியாகதுருகம் மலைப்பகுதியில் ஒரு புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி, மானை மீட்டனர். பின்னர் அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மானின் உடல் நலம் தேறியதும் காப்பு காட்டில் விடப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story