தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது


தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 10:25 PM IST (Updated: 19 March 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சூடேஷ் (வயது 41). அரசு பள்ளி ஆசிரியர். இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் மல்லசந்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை, டி.வி., கால் கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக சூடேஷ் கொடுத்த புகாரின்படி தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த முனிராஜ் (24), பெங்களூரு கொல்லூர் ெரயில்வே கேட் பகுதியை சேர்ந்த சதீஷ் (21), பெங்களூரு பையப்பஅள்ளி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த நாகேஷ் (21) ஆகியோர் இ்ந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 


Next Story