பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார பெண் ஆசிரியர்கள் சார்பில் மகளிர் தின விழா கலைஞர் அரங்கத்தில் கொண் டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார தலைவர் லதா தலைமை வகித்தார். வட்டார துணை தலைவர்கள் கலைமதி, செல்வி, முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள பெண் வட்டார நிர்வாகிகள், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநான், வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, மற்றும் காந்திமதி நகைமாளிகை உரிமையாளர் திமுக அவைத் தலைவருமான சிவக்குமார் ஆகியோர் மகளிர் தின சிறப்புரை ஆற்றினர். சமூக சேவை களுக்கான சிறந்த விருதினை காந்திமதி நகை மாளிகை உரிமையாளர் சிவகுமாருக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பெண் ஆசிரியர்கள் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சி களை நடத்தினர்.
உலக மகளிர் தினமான மார்ச் 8-ந்தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தை திரு மணங்கள், கட்டாயத் திருமணம் பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை எதிரப்பு விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய லெட்சுமி மற்றும் போக்குவரத்து காவலர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு வாசகங்களை ஏந்தி பெண் ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.விழாவில் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப்ரோஸ், ஞான அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வட்டார பொருளாளர் ஞானவிநாயகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story