அவதானப்பட்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அவதானப்பட்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரியின் பின்புறம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்ததாக 54 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் வைத்து இடித்து அகற்றினார்கள். இதில் ஆக்கிரமிப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர், ஷெட்டுகள், நிலங்களில் இருந்த பயிர்கள் அகற்றப்பட்டன.
அப்போது உதவி கலெக்டர் சதீஷ்குமார், தாசில்தார் சரவணன், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் காளிபிரியன், மற்றும் வருவாய்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் இருந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் முரளி, சரவணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story