திமுக இளைஞரணி சார்பில் ஓசூரில் கிரிக்கெட் போட்டியை மேயர் துணை மேயர் தொடங்கி வைத்தனர்


திமுக இளைஞரணி சார்பில் ஓசூரில் கிரிக்கெட் போட்டியை மேயர் துணை மேயர் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 19 March 2022 10:27 PM IST (Updated: 19 March 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

திமுக இளைஞரணி சார்பில் ஓசூரில் கிரிக்கெட் போட்டியை மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஓசூரில் நேற்று கிரிக்கெட் போட்டி நடந்தது. ஓசூரில், தளி சாலையில் உள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிக்கு மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் ராமு, கிருஷ்ணன், வேணு, முருகேசன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில், சூளகிரி சிம்பல் திராடி அணி மற்றும் சூளகிரி காமநாயக்கன்பேட்டை அணியும், ஓசூர், தேன்கனிக்கோட்டை அணிகளும் கலந்துகொண்டு விளையாடின. முன்னதாக, மேயர், துணை மேயருக்கு, வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினர், மண்டல போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் கூறினார். மேலும் இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், வீராரெட்டி, மாவட்ட தி.மு.க. துணை அமைப்பாளர் எம்.சீனிவாசன், மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா, நாகராஜ் மற்றும் இளைஞர் அணியினர், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story