தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
x
தினத்தந்தி 19 March 2022 10:27 PM IST (Updated: 19 March 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 93 மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 93 மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
சேவை மனப்பான்மை
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ படிப்புக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு 93 மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசுகையில், மருத்துவ படிப்பு மகத்தானது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர்கள் உயிர்காக்கும் உன்னத சேவையை மேற்கொண்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தான். இதனால் மருத்துவ பணி மீது மக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை தக்க வைத்துக்கொள்ள மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள நீங்கள் கடுமையாக உழைத்து சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும். மாணவர்கள் சிறந்த டாக்டர்களாக உருவாகி சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று பேசினார்.
மயக்கவியல் கருவி
இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொப்பூர்-பாளையம்புதூர் சுங்கச்சாவடி சார்பில் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மயக்கவியல் பணி நிலைய கருவியின் செயல்பாட்டை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கான மீட்பு சேவை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி, நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாந்தி, மயக்கவியல் துறை முதன்மை பேராசிரியர் முருகேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், தொப்பூர் சுங்கச்சாவடி நிர்வாக திட்ட தலைவர் சிவக்குமார் மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகள், அரசு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவகல்லூரி முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story