மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி


மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 March 2022 10:32 PM IST (Updated: 19 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வளவனூர், 

விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை வட்டார அலுவலக வங்கி பொது மேலாளர் நீரஜ்குமார் பாண்டே கலந்து கொண்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் பொற்கொடியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி சேலம் நிர்வாக பிரிவு துணை பொது மேலாளர் பிரசன்னகுமார், விழுப்புரம் மண்டல மேலாளர் சீதாராமன், விழுப்புரம் விவசாய அபிவிருத்தி கிளை மேலாளர் முகேஷ் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story