84 கிலோ கஞ்சா பறிமுதல்


84 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 19 March 2022 10:33 PM IST (Updated: 19 March 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம்:

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயாகுப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அவரது உத்தரவின்பேரில் ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சின்ன ஓவுலாபுரம் பகுதியில், சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
 
விசாரணையில் அவர்கள் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பூபாலன் (வயது 29), முரளிதரன் (41), விஜயன் (42) என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் ஒடைப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 84 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஓடைப்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story