மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து மகிழ்ந்த கிராமமக்கள்
மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராமமக்கள் மகிழ்ந்தனர்.
எஸ்.புதூர்,
சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் அருகே உள்ளது கே.உத்தம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் காத்தான் கண்மாய் உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் வறண்டு வரும் வேளையில் மழைக்காலத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்கு பின்னர் தற்போது மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இந்த கண்மாயிலும் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து இதன் சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இந்த மீன்பிடி விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் அதிகாலை முதல் இந்த கண்மாய்க்கு மீன்பிடிப்பதற்காக ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றை மீன் பிடி சாதனங்களை கொண்டு வந்து அவற்றின் மூலம் மீன் பிடிக்க தொடங்கினர்.
சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த மீன்பிடி விழாவில் கலந்துகொண்டு மீன்பிடிக்க தொடங்கிய கிராம மக்களின் வலையில் கெண்டை, கெளுத்தி ஆகிய மீன்களை பிடித்து சென்றனர்.
இந்த மீன்பிடி விழாவையொட்டி அந்த பகுதி முழுவதும் நேற்று மீன் வாசம் கம கமத்தது. இதேபோல் எஸ்.புதூரை அடுத்த செட்டிகுறிச்சி அருகே உள்ளது காஞ்சிரங்கண்மாய். இந்த கண்மாயிலும் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து செட்டிக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் இந்த மீன் பிடி விழாவில் கலந்து கொண்டு ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி சாதனங் களை பயன்படுத்தி கெண்டை, கெழுத்தி ஆகிய மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story