கந்தம்பாளையம் அருகே அருணகிரிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
கந்தம்பாளையம் அருகே அருணகிரிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சுள்ளிபாளையம் அருணகிரிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி அருணகிரிமலை அடிவாரத்தில் உள்ள காவிரி ஆற்றில் காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தீர்த்தக்குடம், பால்குடம், தேன்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story