நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்


நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 11:36 PM IST (Updated: 19 March 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம் நடந்தது.

நாமக்கல்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோவை மண்டல கலந்தாய்வு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கவேல், கோவை மாவட்ட அமைப்பாளர் சுவாமி பாசுக்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் ரவி, பொதுச்செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும். புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும். கல்வியை மத்திய பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தொடக்க கல்வி துறையை சுயேச்சையாக தனித்துவத்துடன் செயல்படுத்த வேண்டும். இல்லம் தேடி கல்வி பணியில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story