மோகனூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பெண்
மோகனூர் அருகே பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள குஞ்சாயூர் பூச்சிக்கார தோட்டத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 61). விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (57). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனியம்மாள் திடீரென மாயமானார். அவரை சுந்தரம் பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது அவருடைய வீட்டின் அருகே உள்ள கிணற்றின் பக்கமாக பழனியம்மாளின் செருப்பு கிடந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்று நீரில் பழனியம்மாளை தேடினார். அப்போது பழனியம்மாள் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த மோகனூர் போலீசார் அங்கு சென்று பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், பழனியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story