தண்டவாளம் சீரமைப்பு பணி: கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் நாளை மூடல்
கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் நாளை மூடப்படுகிறது.
கீரனூர்:
திருச்சியில் இருந்து காரைக்குடி வரை மின்சார ரெயில் பாதை அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கீரனூர்- கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் தண்டவாள பகுதி பிரிக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story