சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி


சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 20 March 2022 12:17 AM IST (Updated: 20 March 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் நகராட்சி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் நகராட்சி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது‌. இதை நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.  

இந்த நிலையில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையாராஜா நேற்று திடீரென நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் சாலை சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, பணி மேற்பார்வையாளர் வாசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story