அமைச்சரின் உறவினர் எனக்கூறி ரூ.11¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
கரூரில், அமைச்சரின் உறவினர் எனக்கூறி ரூ.11¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
சூப்பர்வைசர்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவுக்குட்பட்ட காளப்பட்டி அருகே உள்ள சின்னாண்டி பட்டியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்பர்ட் (வயது 40). இவர் திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு நம்பியூர் பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதிக்குட்பட்ட நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, இவர் தாமஸ் ஆல்பர்ட்டிடம் கல்வி அமைச்சரின் உறவினர் எனக்கூறி கடந்த 2018-ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
கைது
இதனை உண்மை என்று நம்பிய தாமஸ் ஆல்பர்ட் மற்றும் ராஜா, சுரேஷ், மருதமுத்து ஆகியோர் மொத்தம் ரூ.11¾ லட்சத்தை ஆனந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் ஆனந்தகுமார் அவர்களுக்கு அரசு வேலை ஏதும் வாங்கி தராமல் இருந்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமஸ் ஆல்பர்ட் இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில், ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story