மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 1:19 AM IST (Updated: 20 March 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி மற்றும் அய்யர்மலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் குப்பாச்சிப்பட்டி பாலம் அருகே மது விற்ற அய்யனூர் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 62) என்பவரை கைது செய்தனர். அதேபோல் அய்யர்மலை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்ற கீழகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தலா 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தோகைமலை அருகே உள்ள கள்ளை பகுதியில் சுக்காபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (40) தனது வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்தார். அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். புன்னம் சத்திரம் அருகே சட்ட விரோதமாக மது விற்ற பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாசம் (34) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story