அலுமினிய தொழிற்சாலையில் திடீர் தீ


அலுமினிய தொழிற்சாலையில் திடீர் தீ
x
தினத்தந்தி 20 March 2022 1:27 AM IST (Updated: 20 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அலுமினிய தொழிற்சாலையில் திடீர் தீ ஏற்பட்டதால் பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகே ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான அலுமினிய தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. அங்கு பணியில் இருந்த கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்த கடற்கரை (வயது 35) என்ற பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்நகர் பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story