ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து அருப்புக்கோட்டையில் த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். த.மு.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மதார்கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் அபுபக்கர் சித்திக், நகர தலைவர் முகமது அலி ஜின்னா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story